எங்கள் நிறுவனத்தின் சுருக்கமான அறிமுகம்

Hello Thamizha என்பது முழுமையான கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் டிசைன் சேவைகள் வழங்கும் ஒரு நம்பகமான நிறுவனம். எங்களிடம் லோகோ வடிவமைப்பு, வலைத்தள வடிவமைப்பு, பிரமாணங்கள் (Flyer), ஐகான்கள், மற்றும் அனைத்து வகையான கிராபிக்ஸ் வடிவமைப்புகளும். எங்கள் நிபுணர்கள் மூலம் ஒரே இடத்தில் வழங்கி வருகிறோம்.


நிறுவனர்

Hello தமிழை நிறுவனத்தின் நிறுவனர் திரு.ஜோசி. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் கிராபிக்ஸ் மற்றும் இணையதள வடிவமைப்பில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். B.Sc கணினி அறிவியல் பட்டதாரர். மேலும், மாயா சாஃப்ட்வேர் மற்றும் அரீனா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் கிராபிக்ஸ் டிசைன் படிப்பு முடித்துள்ளார், Axis Entertainment Limited நிறுவனத்தில் 4 ஆண்டுகள் கிராபிக்ஸ் டிசைனர் மற்றும் வெப் டெவலப்பராக பணியாற்றியுள்ளார்.


அதன்பின்னர் Freepik நிறுவனத்தில் 5 ஆண்டுகள் ஐகான் டிசைனராகவும், Iconfinder மற்றும் Iconscout போன்ற முன்னணி இணையதளங்களில் 7 ஆண்டுகளாக ஐகான் பங்களிப்பாளராக இருக்கிறார். தற்போது பிரின்டிங் துறையிலும் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

எங்கள் நோக்கம்

  • தமிழக மக்களின் டிசைன் தேவைகளை மிக எளிமையாகவும் விரைவாகவும் அனைவருக்கும் பெற்றுக்கொள்ள உதவுவது.
  • டிசைனரை தேட தேவையில்லை, எந்தவிதமான டிசைனாக இருந்தாலும், அதனை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வடிவில் செய்து தருவது.
  • உங்கள் டிசைன் தேவைகளை நிறைவேற்ற எங்கும் செல்லத் தேவையில்லை; நீங்கள் இருக்கும் இடத்திலேயே நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்.

எங்கள் சேவைகள்

லோகோ வடிவமைப்பு (Logo Design)
இன்ஃபோகிராஃபி மற்றும் விளக்கப்படங்கள் (Infographics & Illustrations)
லேபல்கள், ஸ்டிக்கர்கள் (Labels & Stickers)
புகைப்பட திருத்தம் (Photo Editing)
பறக்கத் தயாரான ஃப்ளையர்கள் (Flyers)
குறுந்தகடுகள் & புத்தக வடிவமைப்பு (Booklets & Catalogs)
சமூக ஊடக டிசைன்கள் (Social Media Designs)

உங்கள் சரியான தேர்வாக எங்களை ஏன் தெரிவுசெய்ய வேண்டும்?

அனுபவம் மற்றும் நம்பிக்கை

10 ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை டிசைன் சேவைகளை வழங்கி வருகிறோம். உங்கள் தேவையை புரிந்து, சிறந்த தீர்வுகளை தருவதே எங்கள் நோக்கம்.

விலை குறைந்தும், தரம் குறையாத சேவை

அதிக செலவு இல்லாமல், உங்களுக்கு தேவையான அனைத்து கிராஃபிக் மற்றும் பிராண்டிங் வேலைகளையும் தரமான முறையில் செய்து தருகிறோம்.

விரைவு சேவை

நீங்கள் அனுப்பும் தகவலுக்கேற்ப, மிகக் குறைந்த நேரத்தில் உங்கள் டிசைன் தயாராகும். நேரத்தை மதித்து செயல்படுவதே எங்கள் பாணி.

தனிப்பயன் அணுகுமுறை

ஒவ்வொரு வாடிக்கையாளரையும் தனிப்பட்ட கவனத்துடன் அணுகி, அவர்களது தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு தீர்வுகளை உருவாக்குவது எங்களின் தனித்துவமான சிறப்பு.

வாடிக்கையாளர் திருப்தி

எங்கள் நேர்மை, தரம் மற்றும் முழுமையான சேவை நிறைவேற்றமே, வாடிக்கையாளர்கள் எங்களை மீண்டும் தொடர்பு கொள்வதற்கான முக்கியக் காரணம்.

உங்கள் கனவுகளை வடிவமாக்கும் எங்கள் வடிவமைப்பாளர்கள்.

josy

Josy Dom Alexis
Senier Graphic Designer

15 வருட அனுபவமுள்ள மூத்த கிராஃபிக் வடிவமைப்பாளர், பல பிராண்டுகளுக்கான லோகோ, பேனர், ப்ரோஷர் மற்றும் டிஜிட்டல் டிசைன்களில் நிபுணத்துவம் பெற்றவர். நுணுக்கம், கலை நயம் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திறமை கொண்டவர்.

josy

Anandhi
Senier Graphic Designer

5 வருட அனுபவமுள்ள கிராஃபிக் டிசைனர், லோகோ, ப்ரோஷர், பேனர், சமூக ஊடக டிசைன்களில் நிபுணர். நவீன உத்திகள் மற்றும் படைப்பாற்றலுடன், வாடிக்கையாளர் தேவைகளை நேர்த்தியாக முடிக்கும் திறமை கொண்டவர்.

உங்கள் டிஜிட்டல் தேவைகளுக்கான சிறந்த தீர்வு